அமித்ஷாவுக்கு ஆப்பரேஷன்! கழுத்து கட்டி நீக்கப்பட்டது!!
அமித்ஷாவுக்கு ஆப்பரேஷன்! கழுத்து கட்டி நீக்கப்பட்டது!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று (புதன்கிழமை) சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கே.டி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கழுத்தின் பின் புறத்தில் இருந்த கொழுப்புக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய அவர் தற்போது நலமாக இருக்கிறார்.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 9 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கழுத்தின் பின்புறத்தில் இருந்த லிப்போமா என்ற கொழுப்புக் கட்டி அகற்றப்பட்டது. சிறிய அறுவை சிகிச்சை என்பதால் அது முடிந்தவுடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.