"மராட்டியத்தில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றி, சிவா சேனா இல்லாமல் தனித்து ஆட்சி, அழிகிறது காங்கிரஸ்" - கருத்துக்கணிப்பு!

"மராட்டியத்தில் பா.ஜ.க வரலாறு காணாத வெற்றி, சிவா சேனா இல்லாமல் தனித்து ஆட்சி, அழிகிறது காங்கிரஸ்" - கருத்துக்கணிப்பு!

Update: 2019-10-18 03:43 GMT

மகாராஷ்ட்ராவில் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் - சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உட்பட ஐக்கிய முன்னணி à®•à¯‚ட்டணியும் மற்றும் AIMIM உடன் பிரகாஷ் அம்பேத்கரின் VBA கட்சி உடன்பாடு வைத்துக் கொண்டு மும்முனை போட்டி நிலவுகிறது.


இந்த தேர்தலில் பா.ஜ.க 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 142 முதல் 147 இடங்கள் வரை பெறும் எனவும், கூட்டணிக் கட்சியான சிவசேனா போட்டியிடும் 124 தொகுதிகளில் 83 முதல் 85 இடங்களைப் பெறலாம் என்றும், காங்கிரசுக்கு 21 முதல் 23  à®µà®°à¯ˆ இடங்கள் கிடைக்கலாம் என்றும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 27 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பா.ஜ.க-வும், சிவா சேனாவும் தாங்கள் ஏற்கனவே பெற்ற தொகுதிகளை விட இந்த முறை கூடுதலாக சராசரி 20 தொகுதிகளைப் பெறக்கூடும் என தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக ரிபப்ளிக் தொலைகாட்சி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 


அதே சமயம், இந்த தேர்தல் காங்கிரசுக்கும், பவார் கட்சிக்கும் பேரிடியாக அமையும் என்றும் சென்ற 2014-ஆம் ஆண்டு 42 இடங்களை பெற்ற à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ கட்சிக்கு இந்த தேர்தலில் வெறும் 22 இடங்கள் தான் கிடைக்கும் என்றும், அதேபோல சென்ற 2014-ஆம் ஆண்டு 41 இடங்களைப் பெற்ற சரத் பவார் கட்சிக்கு இந்த முறை வெறும் 28 இடங்கள் வரை தான் கிடைக்கக்கூடும் எனவும் தேர்தல் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


சென்ற 2014 à®¤à¯‡à®°à¯à®¤à®²à®¿à®²à¯ பா.ஜ.க 28.1% வாக்குகள் பெற்று சிவசேனா உதவியுடன் ஆட்சியை அமைத்தது. இந்த முறை பா.ஜ.க 33% வாக்குகள் பெறும் எனவும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சிவ சேனா சென்ற 2014 à®¤à¯‡à®°à¯à®¤à®²à®¿à®²à¯ 19.5% வாக்குகள் பெற்றது. இந்த முறை 24%-மாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சென்ற தேர்தலில் 18.1% வாக்குகள் பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 11% இடங்களை மட்டுமே பெறும் இதன் மூலம் அக்கட்சிக்கு 7.1% வாக்குகள் சரிவு ஏற்படும், சென்ற தேர்தலில் 17.4% வாக்குகள் பெற்ற சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 15% தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்திலும் பரிதாபமாக ராஜ் தாக்கரேயின் MNS கட்சி சென்ற தேர்தலில் 3.2% வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் 1% வாக்குகள்தான் பெறும் எனவும் இதன் மூலம் அந்த கட்சி 2.2% சதவீத வாக்குகளை இழப்பதாக அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு பிரதிப் பண்டாரியில் ஜன் கி பாத் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து ரிபப்ளிக் டிவியால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News