எங்களின் மூத்த சகோதரர் பிரதமர் மோடி! முஸ்லீம் பெண்கள் நெகிழ்ச்சி!

எங்களின் மூத்த சகோதரர் பிரதமர் மோடி! முஸ்லீம் பெண்கள் நெகிழ்ச்சி!

Update: 2019-08-11 12:08 GMT

சகோரத்துவத்தை உணர்த்தும் ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம்பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்ளனர்.



முத்தலாக் முறையை ரத்து செய்யும் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றியதை வரவேற்கும் வகையில், ராக்கி கயிறுஅனுப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.







இது குறித்து வாரணாசியின் ராம்பூரா பகுதியை சேர்ந்த ஹியுமா பனோ என்ற பெண்  கூறுகையில்,


“பிரதமர் மோடியால்தான் முத்தலாக்முறை ரத்து செய்யப்பட்டது. அவர், நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் மூத்த சகோதரர் போன்றவர். ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு எங்களது சகோதரருக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்ளோம்” என்றனர்






சகோதரத்துவத்தை உணர்த்தும், ரக்சா பந்தன் விழா, நாடு முழுவதும் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படபடுகிறது.


Similar News