காஷ்மீரில் இன்று, 190-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன! மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்!!

காஷ்மீரில் இன்று, 190-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன! மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்!!

Update: 2019-08-19 09:02 GMT
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டு, கடந்த 5-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இதனையொட்டி காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணையதளம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தன.

தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவும் பல இடங்களில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.
இன்று அங்கு 190 க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கு திரும்புவதை காண முடிகிறது. மாநிலம் முழுவதும் பலத்த ரோந்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் லேண்ட்லைன் போன் இணைப்புகளும் கொஞ்சம், கொஞ்சமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 2ஜி இன்டர்நெட் சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் எவ்வித அசம்பாவிதமும் இல்லை. தொடர்ந்து அமைதி நிலவுகிறது.

Similar News