குஜராத்தில் மீண்டும் மதக் கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் சதிவேலை! ஊடுருவ துடிக்கும் பயங்கரவாதிகள் ! உளவுத் துறையினர் திடீர் எச்சரிக்கை!!
குஜராத்தில் மீண்டும் மதக் கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் சதிவேலை! ஊடுருவ துடிக்கும் பயங்கரவாதிகள் ! உளவுத் துறையினர் திடீர் எச்சரிக்கை!!
பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி மத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் 10 பேர், கடல் வழியாக குஜராத்திற்குள் ஊடுருவ முயற்சி செய்யலாம் எனவும் உளவுத்துறையினர் கூறியுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானிற்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் வகையில், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை ஊடுருவ முயற்சி செய்து வருகிறது. எல்லையில், 100 சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்களை குவித்துள்ளது.
எனினும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு, இந்திய வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 3 வாரத்தில் மட்டும்,இந்திய பதிலடியில் 10 பாகிஸ்தான் கமாண்டோக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். எல்லையில், இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில் சுமார் 290கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கஸ்னாவி என பெயரிடப்பட்ட ஏவுகணைபயிற்சி நடந்ததாக பாகிஸ்தான் ராணுவப்படை தளபதி ஆசிப் கஃபூர் தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் குஜராத்தில் மதக்கலவரம் ஏற்படுத்தவும், பயங்கரவாத தாக்குதல் நடத்துவும், கமாண்டோக்கள் கட்ச் வளைகுடா பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய கடலோர காவல் படைகள், உளவுத்துறை அதிகாரிகள், குஜராத் போலீசார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். குஜராத்தில் உள்ள முந்த்ரா, கண்ட்லா துறைமுகங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கட்ச் வளைகுடா அருகே பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் நடமாடியதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.