பாகிஸ்தான் டாக்டர்கள், உடனே வெளியேற உத்தரவு! அரபு நாடுகள் அதிரடி!!

பாகிஸ்தான் டாக்டர்கள், உடனே வெளியேற உத்தரவு! அரபு நாடுகள் அதிரடி!!

Update: 2019-08-08 11:01 GMT


அரபு நாடுகளில் பணியாற்றிவரும் பாகிஸ்தான் மருத்துவர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில், எம்.எஸ். மற்றும் எம்.டி போன்ற முதுகலை மருத்துவப் படிப்பின் தரம் மற்றும் பயிற்சி, சிறப்பானதாக இல்லாததால், அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபிய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் டாக்டர்களை, உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.


“பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் பாகிஸ்தானில் எம்.எஸ்., எம்.டி படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம்” என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. 


அதோடு மருத்துவர்கள் பலரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.


சவுதி அரசின் இந்த நடவடிக்கை தங்களை கடுமையாக பாதித்துள்ளதாக, அங்கு பணியாற்றும் அலி உஸ்மான் என்ற பாகிஸ்தான் மருத்துவர் தெரிவித்துள்ளார். “லாகூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடம் மேற்படிப்பு முடித்தேன். அங்குள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்றபின் சவுதிக்கு வேலைக்கு வந்தேன். சவுதி சுகாதார அமைச்சகம் எனது ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இந்த நீக்கத்தால் எனது குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபியாவைத் தொடர்ந்து, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளன.


Similar News