கற்பழிக்க கடத்தப்படும் சிறுபான்மையின பெண்கள்.. பாகிஸ்தானில் பள்ளியிலேயே இந்துக்களுக்கு எதிராக வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியர்கள்

Pakistan: Hindu businessman shot dead in Sindh, Hindus gherao local police station demanding immediate arrest of assailants

Update: 2022-01-05 02:45 GMT

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள அனாஜ் மண்டியில் 44 வயதுடைய இந்து தொழிலதிபர் சுனில் குமார் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஜனவரி 2 அன்று, கொடூரமான கொலை நடந்த உடனேயே, இந்துக்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணா நடத்துவதற்காக கூடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து வர்த்தகர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வன்முறைகள் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் கடத்துவது, இந்துக்களின் வீடுகளை சேதப்படுத்துவது தொடர்பான பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

குறிப்பாக சிறுபான்மை இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கோயில்களை இழிவுபடுத்துவது தொடர்பான பல்வேறு சம்பவங்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து பதிவாகி வருகின்றன. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக சர்வதேச சமூகம் பாகிஸ்தானை கண்டித்துள்ளது. இருப்பினும் நாட்டில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க இம்ரான்-கான் அரசாங்கம் சிறிதும் முயற்சிசெய்யவில்லை.

உண்மையில், கடந்த மாதம், பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் ஒருவர் , நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்துக்கள் மீதான வெறுப்பு எவ்வாறு புகுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியிருந்தார் . பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் இலங்கை தொழிற்சாலை மேலாளர் ஒருவர் தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சகிப்பின்மை மற்றும் மதவெறி குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து வேதனை தெரிவித்த இந்து நபர் ஒருவர் "எங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன கற்பிக்கப்படுகிறது? என் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, ​​என்னிடம் வினோதமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு நாள், பாகிஸ்தானில் இந்துக்கள் இருக்கிறார்களா என்று என் மகன் கேட்டான். என் இந்து நண்பனைப் பற்றிச் சொன்னேன் என்றார். மேலும்   "உங்களுக்கு சிந்துவில் இந்துக்கள் இருந்தால், அவர்களை ஏன் கொல்லக்கூடாது" என்று என் மகனுக்கு பள்ளியில் கற்பிக்கப்பட்டதாக கூறினார். 


Tags:    

Similar News