காஷ்மீர் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை கொல்ல திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுத்துறை - காஷ்மீர் விவகாரத்தில் கசிந்த பகீர் தகவல்!
காஷ்மீர் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை கொல்ல திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுத்துறை - காஷ்மீர் விவகாரத்தில் கசிந்த பகீர் தகவல்!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதே மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக காஷ்மீரில் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் உளவுபடை படுகொலை செய்துவிட்டு அந்த பழியை இந்திய அரசு மீது போட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு காஷ்மீர் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிரடியாக சிறை பிடிக்கப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். இவை அனைத்தையும் மத்திய அரசின் ரகசிய குழுக்கள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக செய்து முடித்தன.
கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களும் மோடிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்தது. அந்த இரு நாட்களில் காஷ்மீரை ஒட்டுமொத்தமாக வளைத்து மத்திய அரசு கைக்குள் கொண்டு வந்து விட்டது. படைகள் குவிப்பு, 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு போன்றவை மக்களை வெளியில் வராமல் இருக்க செய்தது.
இதன் மூலம் காஷ்மீரில் அசம்பாவிதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே நேற்று அதிரடியாக சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிக்கப்பட்டது.இந்த திட்டங்கள் அனைத்தும் காஷ்மீரில் உள்ள உயர் அரசு அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் எடுக்கப்பட்டதாகும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றபோது காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்து பேசினார்.
அதன் பிறகுதான் இனி தாமதிக்க கூடாது என்று மோடியும், அமித்ஷாவும் 10 நாட்களுக்குள் தங்கள் திட்டத்தை அதிரடியாக நிறைவேற்றி உள்ளனர்.