“பயங்கரவாதத்தை, இனப்பெருக்கம் செய்யும் நாடு பாகிஸ்தான்” - மனித உரிமை ஆர்வலர் பகீர்!!
“பயங்கரவாதத்தை, இனப்பெருக்கம் செய்யும் நாடு பாகிஸ்தான்” - மனித உரிமை ஆர்வலர் பகீர்!!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த ரசாக் பலோச். இவர் பலோச் மனித உரிமை பேரவையின் அமைப்பாளராக உள்ளார். இவர் ஜெனிவாவில் நடந்து வரும் மனித உரிமை மாநாட்டில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் தனி அரங்கம் அமைத்து விளக்கி உள்ளார்.
ரசாக் பலோச், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1947-ஆம் ஆண்டு பலுசிஸ்தான் சுதந்திர நாடாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானை எங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆக்கிரமித்தது. அன்று முதல் இன்று வரை, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.
பயங்கரவாதத்தை இனப்பெருக்கம் செய்து வருகிறது பாகிஸ்தான். பலுசிஸ்தான் மக்களை திட்டமிட்டே இனப்படுகொலை செய்து வருகிறது. இது உலகிற்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் அங்கு எந்த சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. எந்த நீதியும் இல்லை.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. இந்த நிதியை பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உருவாக்க, மதரஸாக்களைக் கட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களை அரங்கேற்றவும், தற்கொலை படையினருக்கு பயிற்சியளிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது.
ஜியா பிரிவு முஸ்லீம்களை படுகொலை செய்கின்றனர். அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர். முஸ்லிம் நாடு என்ற போர்வையில் இதை செய்கின்றனர். ஜியா பிரிவினர் முஸ்லிம்கள் இல்லையா?