மலை போல நம்பியிருந்த சீனாவும் போச்சு! மோடி- சீன அதிபர் சந்திப்பால் ஆட்டம் கண்ட பாகிஸ்தான் - காங்கிரசோடு ட்விட்டரில் இணைந்து 'GoBackModi’ என்று பதிவிட்ட பரிதாபம்!

மலை போல நம்பியிருந்த சீனாவும் போச்சு! மோடி- சீன அதிபர் சந்திப்பால் ஆட்டம் கண்ட பாகிஸ்தான் - காங்கிரசோடு ட்விட்டரில் இணைந்து 'GoBackModi’ என்று பதிவிட்ட பரிதாபம்!

Update: 2019-10-11 14:19 GMT

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் தன்னால் இயவில்லை என்று, இந்தியாவின் மதிப்பை குறைத்து பிரச்சாரம் செய்யும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எடுத்த அனைத்து முயற்சிகளிலும் மண்ணை கவ்விய நிலையில், பொய் செய்தி பரப்பியாவது தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.


சீனாவை தன் கைக்குள் போட்டுக்கொண்டு காரியம் சாதித்து விடலாம் என்று நினைத்த நிலையில், பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு இன்று மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இது பிரதமர் மோடி அரசின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தியா-ரஷ்யா இடையே பொருளாதார ரீதியாக தாண்டி, ராஜாங்க முறையில் நல்லுறவு நீடிக்கிறது. அது போல சீனாவும் நெருங்கி வருகிறது. இது நடந்துவிட்டால், முற்றிலுமாக பாகிஸ்தான் உலக அரங்கில் இருந்து தனிமை படுத்தப்பட்டு விடும். இதற்கு பயந்து தான் இத்தனை அலப்பறைகள் எல்லாம்.


பிரதமர் சீன அதிபருடன் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதை எதிர்த்து ட்விட்டரில் ‘#GoBackModi’ என்று பதிவிடப்பட்டு வருகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயங்குவது தெரிய வந்துள்ளது. பிரதமர் தமிழகத்திற்கு வரும் வேளையில் காங்கிரஸ், திமுகவால் திட்டமிட்டு ‘#GoBackModi’ என்ற ஹாஸ்டாக் பதிவிடப்பட்டு வந்தது. இப்போது அந்த வரிசையில் பாகிஸ்தானும் இணைந்து தனது நிலை இதுதான் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது. ஒட்டுமொத்த எதிரிகளும், தேச துரோகிகளும்  ஒரே நேரத்தில் கதறுகிறார்கள், ஓலமிடுகிறார்கள் என்றால் இந்தியா எந்த அளவுக்கு ராஜதந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.




https://twitter.com/MuzzammilAslam3/status/1182563159552483330




https://twitter.com/jamshaidasi/status/1182580182462410752




https://twitter.com/mazeem44/status/1182571203489341440

Similar News