“ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டமே இல்லை” என்று கூறி நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமான பாகிஸ்தான் அமைச்சர்!!

“ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டமே இல்லை” என்று கூறி நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமான பாகிஸ்தான் அமைச்சர்!!

Update: 2019-09-23 10:30 GMT


சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானின் அறிவியல் துறை அமைச்சர் பவாத் ஹுசைன் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து கருத்து பதிவிட்டார். இதற்காக நெட்டிசன்களிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது சொல்லி மாளாது.


இதுபோல, காஷ்மீர் விவகாரத்திலும் அவ்வப்போது மோசடி தகவல்களை பதிவிட்டு முகத்தில் கரியைப் பூசிக்கொள்வார்.


அந்தவகையில் புதிதாக, அமெரிக்காவில் மோடியின் “ஹவுடி மோடி” நிகழ்ச்சிக்கு கூட்டம் இல்லை என்று கிண்டலுக்காக பதிவிட நெட்டிசன்கள், பவாத் ஹுசைனை வறுத்து எடுத்துவிட்டனர். நெட்டிசன்களிடம் சிக்கி அவர் சின்னா பின்னமாகி விட்டார்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் “ஹவுடி மோடி” நிகழ்ச்சி நடந்தது. இந்த மைதனாத்தில் அதிகபட்சமாக 50000 பார்வையாளர்கள்தான் அமர முடியும்.


ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்காக 53000 பேர் திரண்டுள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்.ஆர்.ஜி. மைதானத்தில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.


இதற்கிடையே, கடந்த சில நாட்களாக டெக்சாஸ் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு சிலர் பலியாகி உள்ளனர்.





இந்த மழையின் காரணமாக அமெரிக்க அதிபர் டிரெம்ப் “ஹவுடி மோடி” நிகழ்ச்சியில் பங்கேற்பது கடைசி நேரத்தில் ரத்தாகும் நிலைக்கு சென்றுள்ளது. அதனால் அவர் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்துள்ளார். அதாவது இந்திய நேரப்படி நேற்று இரவு 9.20 மணிக்கு வந்திருக்க வேண்டிய டிரம்ப், 10.25 மணிக்கே வந்துள்ளார்.


இத்தனை இடற்பாடுகள் இருந்தும் மைதானத்திற்குள் 53000 பேர் குவிந்தது உலக அரங்கில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. அது மட்டுமல்ல, அமெரிக்க வரலாற்றில் வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு இத்தகைய பிரம்மாண்ட கூட்டம் கூடுவது இதுவே முதல் முறை.


இப்படிப்பட்ட இந்த பிரம்மாண்ட கூட்டத்தைதான் பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் கேலி செய்து வலிய வந்து சிக்கி உள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “ இது ஒரு நம்பிக்கையில்லாத நிகழ்ச்சி. பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது. கோடிக்கணக்கான பணத்தை அள்ளி வீசி அமெரிக்கா, கனடா மற்றும் வெளி நாடுகளில் இருந்தெல்லாம் கூட்டத்தை வரவழைத்தும், இவ்வளவு பேரைத்தான் கூட்ட முடிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/fawadchaudhry/status/1175799706389221378





இந்த பதிவு வெளியானதுதான் தாமதம், நெட்டிசன்கள், பவாத் ஹுசைனை உண்டு இல்லை என்று செய்துவிட்டனர்.


பால்டு மேன் என்பவர், ஹவுடி மோடி நிகழ்ச்சியின் வீடியோவை பதிவிவேற்றம் செய்துள்ளார். அதோடு,“பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் புத்திசாலிகள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் ஒருபோதும் உங்களை நம்பமாட்டார்கள். இது உண்மையான வீடியோ. இது உங்களுக்கு வயிறு எரியும் நேரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/not_done_/status/1175803249858940929


மற்றொருவர் அமெரிக்காவில் பிரதமர் நரேந்தி மோடிக்கு கிடைந்த வரவேற்பையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது, அவருக்கு கிடைத்த வரவேற்பையும் ஒப்பிட்டு படத்தை பதிவிட்டு, பாகிஸ்தானை அசிங்கப்படுத்தி உள்ளார்.




https://twitter.com/pooja35956823/status/1175799771971252224


“இம்ரான் கானை, வரவேற்க, சிவப்பு கம்பள வரவேற்புக்கு பதில் பாத்ரூம் விரிப்பை போட்டது யாரய்யா”  என்று ராஜிந்தர் சிங் கலாத்துள்ளார்.




https://twitter.com/Raji_962/status/1175977010570514432



பவாத் ஹுசைனின் இந்த டுவிட்டர் பதிவால் நெட்டிசன்கள், இம்ரான்கானையும் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.


Similar News