அடியோடு சரிந்த பாகிஸ்தான் பொருளாதாரம் - இதுல காஷ்மீர் விவகாரத்தை கண்டுக்கனுமா.? பரிதாப நிலையில் இம்ரான் கான்.!

அடியோடு சரிந்த பாகிஸ்தான் பொருளாதாரம் - இதுல காஷ்மீர் விவகாரத்தை கண்டுக்கனுமா.? பரிதாப நிலையில் இம்ரான் கான்.!

Update: 2019-11-02 08:35 GMT

பாகிஸ்தானில் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார சீரழிவு காரணமாக காஷ்மீர் விவகாரத்தை எல்லாம் அந்நாட்டு மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரையில் எந்த அரசும் மேற்கொள்ளாத துணிச்சலான முடிவை காஷ்மீர் விவகாரத்தில் எடுத்தது. இதனால் பயங்கரவாதிகளை ஊக்குவித்து இந்தியா மீது தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காஷ்மீரில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்து சீனாவின் உதவியை நாடி, பிறகு ஐ.நா சபை வரை சென்றும், உலக நாடுகள் அனைத்தும் இந்தியா பக்கமே நின்றன.


இந்தியாவை எதிர்க்க நினைத்து பலத்த அடி வாங்கியதோடு மட்டுமல்லாது, பொருளாதாரமும் அதாள பாதாளத்துக்கு சென்றது. பணவீக்கம் அதிகரித்து  பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகமானது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.


இதனால் காஷ்மீர் விவகாரத்தை மெனக்கெட்டு கண்டு கொள்ள பாகிஸ்தான் மக்கள் தயாராக இல்லை. அவர்கள் நாடு இருக்கும் பொருளாதார நிலைக்கு, தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்ற எண்ணமே, அந்நாட்டு மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டதில் 53 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த நாட்டு மக்களின் 8 சதவீதம் பேர் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளனர்.



Similar News