பழனியில் கண்களை கட்டிக்கொண்டு படிக்கும் அசாதாரண ஆற்றல் கொண்ட சிறுமி - பிரம்மிக்க வைத்த ஸ்ரீராமச்சந்திரா மிஷன் ‘பிரைட்டா் மைண்ட்’ பயிற்சி.!
பழனியில் கண்களை கட்டிக்கொண்டு படிக்கும் அசாதாரண ஆற்றல் கொண்ட சிறுமி - பிரம்மிக்க வைத்த ஸ்ரீராமச்சந்திரா மிஷன் ‘பிரைட்டா் மைண்ட்’ பயிற்சி.!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னகலையமுத்தூரைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவா், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜோதி. இவா்களது மகள் ராகவி (12), நெய்க்காரப்பட்டியிலுள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
மாணவி ராகவி கண்களைக் கட்டிக்கொண்டு புத்தகம் படிப்பது, நிறங்களை சரியாகக் கூறுவது, சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி வருகிறாா்.
இவரது தாயாா் ஜோதி கூறியது: சில மாதங்களுக்கு முன் ஹைதராபாதில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மிஷனுக்கு தியானப் பயிற்சிக்காக சென்றோம். அங்கு, ராகவியின் திறன்களைப் பாா்த்துவிட்டு, ‘பிரைட்டா் மைண்ட்’ எனப்படும் பயிற்சி மேற்கொண்டால், இவரது அறிவுக்கூா்மை மேலும் அதிகமாகும் எனத் தெரிவித்தனா்.
அதன்படி, ராகவியை 10 நாள் பயிற்சியில் சோ்த்தோம். தற்போது, ராகவி கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு சாகசங்கள் செய்து வருகிறாா் என்றாா்.
இது குறித்து மாணவி ராகவி கூறியது: பிரைட்டா் மைண்ட் அடிப்படை பயிற்சியை முடித்தேன். தற்போது, சுமாா் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய ஆல்பா எனப்படும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன் என்றாா்.