உலகின் மகத்துவம் வாய்ந்த 100 சுற்றுலாத் தலங்களில் பட்டேல் சிலை - ஒரே ஆண்டில் 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை கையாண்டு சாதனை!

உலகின் மகத்துவம் வாய்ந்த 100 சுற்றுலாத் தலங்களில் பட்டேல் சிலை - ஒரே ஆண்டில் 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை கையாண்டு சாதனை!

Update: 2019-10-28 11:38 GMT

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவைப் போற்றும் வகையில், ஒற்றுமைச் சிலை நாட்டிற்கும் உலகிற்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய உருவச்சிலை. அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட உயரத்தில் இரண்டு பங்கு கொண்ட சிலை இது. உலகின் மிக உயரமான சிலை எனும் போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.


ஒரே ஆண்டில், 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், ஒற்றுமைச் சிலையைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் 8500 பேர்கள் ஒற்றுமைச் சிலையை பார்க்க வந்திருக்கின்றனர். இப்போது அங்கே சப்பாத்திக்கள்ளித் தோட்டம், பட்டாம்பூச்சிகள் தோட்டம், வனச்சுற்றுலா, குழந்தைகள் ஊட்டச்சத்துப் பூங்கா, ஒற்றுமை நர்சரி போன்ற பல கவர்ச்சிமிகு மையங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


இதனால் அந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருக்கிறது, மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதியபுதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன. வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மனதின் கொண்டு, பல கிராமவாசிகள், தங்கள் வீடுகளில், home stay வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இல்லத்தில் தங்குவசதிகளை அமைத்துக் கொடுப்பவர்களுக்கு, தொழில்ரீதியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


அங்கிருக்கும் மக்கள் இப்போது Dragon fruit என்ற பழத்தை பயிர் செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள், விரைவிலேயே இது அங்கிருப்போரின் வாழ்வாதாரத்துக்கான முக்கியமான ஆதாரமாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


நாட்டிற்காக அனைத்து மாநிலங்களுக்காக, சுற்றுலாத் துறைக்காக, இந்த ஒற்றுமைச் சிலை என்பது ஒரு ஆய்வுப் பொருளாக ஆக முடியும். எப்படி ஒரே ஆண்டிற்குள்ளாக, ஒரு இடம், உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலா இடமாக மாற முடியும். அங்கே நம் நாட்டைச் சேர்ந்தவர்களும், அயல்நாடுகளிலிருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். போக்குவரத்து, தங்குவசதிகள், வழிகாட்டிகள், சூழலுக்கு நேசமான அமைப்புகள், ஒன்றன்பின் ஒன்றாக இப்படி பல அமைப்புகள் மேம்பாடு அடைந்து வருகின்றன.


மிகப்பெரிய அளவில் பொருளாதார அமைப்பு மேம்பாடு அடைந்து வருகிறது. பயணிகளின் தேவைக்கேற்ப அங்கே வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மகத்துவம் வாய்ந்த 100 சுற்றுலாத் தலங்களில் ஒற்றுமைச் சிலைக்கு முக்கியமான இடத்தை டைம் பத்திரிக்கை சில நாட்கள் முன்னர் அளித்துள்ளது.


Similar News