“அமைதியும், நல்லிணக்கமும்” - இந்தியாவின் அறைகூவல்! அன்று சுவாமி விவேகானந்தர் முன்மொழிந்தார்; இன்று பிரதமர் மோடி வழிமொழிந்துள்ளார்!!
“அமைதியும், நல்லிணக்கமும்” - இந்தியாவின் அறைகூவல்! அன்று சுவாமி விவேகானந்தர் முன்மொழிந்தார்; இன்று பிரதமர் மோடி வழிமொழிந்துள்ளார்!!
அமெரிக்கவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான எங்கள் நாட்டில் தேர்தல் நடந்து முடிந்ததுள்ளது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான் இங்கே உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை தேர்வு செய்ததைவிட, எதற்காக தேர்வு செய்தார்கள் என்பது மேலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகின் மிகப்பெரிய வளரும் நாடான இந்தியாவில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்களில், சுகாதார மேம்பாட்டிற்காக 11 கோடி கழிப்பிடங்களை நாங்கள் கட்டி முடித்து இருக்கிறோம். இது உலகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வளரும் நாடு என்ற நிலையில் நாங்கள் மருத்துவ திட்டங்கள், ஏழைகளுக்கான நேரடி மாநியம் வழங்கும் திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கல், ஊழலை ஒழிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றம் போன்றவை, ஏழை மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
நான் ஐக்கிய நாட்டு சபைக்கு வந்தபோது, இங்கு உள்ள சுவரில் “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்போம்” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். நான் மிக சந்தோசமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன். இந்தியாவில் நாங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதனை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். வருகின்ற ஆண்டுகளில் நிலத்தடி நீர் சேமிப்பு, மக்கள் 15 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு போன்றவற்றை வழங்க இருக்கு வழங்கியிருக்கிறோம்.