காஷ்மீரில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, அனைவருக்கும் சமூக ரீதியான ஒதுக்கீடுகள் இனி கிடைக்கும்!!

காஷ்மீரில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, அனைவருக்கும் சமூக ரீதியான ஒதுக்கீடுகள் இனி கிடைக்கும்!!

Update: 2019-08-08 09:59 GMT

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தினர் கூறும்போது, “துணைநிலை ஆளுநர் மற்றும் சட்டப்பேரவையுடனான டெல்லி நிர்வாகமே இனி ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் முன்மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.


மேலும் ஜம்மு-காஷ்மீரின் துப்புரவுப் பணிகளுக்காக கடந்த 1957-ம் ஆண்டில் வால்மீகி எனும் தலித் சமூகத்தினர் மற்ற மாநிலங் களில் இருந்து அழைத்து வரப் பட்டனர். துப்புரவுப் பணி மட்டுமே செய்து வந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் நிரந்தரக் குடியுரிமை யும் அளிக்கப்படவில்லை.


தற்போது இந்த மாற்றத்தின் மூலம் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.


இதே போல், மத்திய அரசின் சமூக ரீதியான ஒதுக்கீடுகளும் ஜம்மு-காஷ்மீரில் இனி அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.


Similar News