அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி! 490 ஆண்டு கால போராட்டத்துக்கு பின் ராம பக்தர்களுக்கான தீர்ப்பு!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி! 490 ஆண்டு கால போராட்டத்துக்கு பின் ராம பக்தர்களுக்கான தீர்ப்பு!
அயோத்தியில் கடந்த 490 ஆண்டுகளாக மொகலாயர் ஆட்சி நீதிமன்றங்களிலும், இடையில் ஆங்கில அரசு நீதி மன்றங்களிலும், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றப்பின் இந்திய அரசின் நீதி மன்றங்களிலும் நடைபெற்று வந்த ராமஜென்ம பூமி தொடர்பான நில வழக்கு சமீபத்தில் நிறைவடைந்து இன்று காலை 11 மணியளவில் தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பினை வாசித்தார்.. இந்த தீர்ப்பில், 'அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்துக் கொடுத்தது தவறு; சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும். என்றாலும் அப்பகுதியில் கட்டப்பட்ட மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. பாபர் காலத்தில் கட்டப்பட்டது. மேலும் அந்த இடம் தங்களுக்குத்தான் உரியது என்கிற இஸ்லாமிய தரப்பு வாதத்துக்கு எந்த சாட்சியங்களும் இல்லை. அதே சமயம் இது இடிக்கப்பட்ட ராமர் கோவில்தான் என்பதை முழுவதுமாக தெளிவு படுத்த தொல்லியல் துறையால் இயலவில்லை. என்றாலும் இந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்கிற கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை புறந்தள்ள முடியாது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம். இதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு தொடங்கி கோவில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தை 3 மாதத்துக்குள் உருவாக்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நீண்ட காலமாக அங்கு ராமர் கோவில் கட்ட கோரிக்கை எழுப்பி வரும் ராம் லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட வக்பு வாரியம் விரும்பும் வேறு இடத்தினை உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்து வரவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. .
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவில் தரப்பிற்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது, மேலும் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அமைக்க வேண்டிய அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 3 மாதத்திற்குள் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் செயல்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இந்த உத்தரவு மூலம் ராமன் பிறந்த இடத்தில் சிதைக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட வேண்டி நீண்ட போராட்டம் நடத்திவந்த ராம்லாலா அமைப்பினர் மற்றும் பாரதம் முழுவதும் ராம பக்தர்களுக்கும் , இந்துக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.