"முதலீடுகள் செய்ய இது ஒரு பொருத்தமான நேரம்!" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

"முதலீடுகள் செய்ய இது ஒரு பொருத்தமான நேரம்!" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Update: 2019-10-17 04:22 GMT

இந்திய எரிசக்தி மன்றம் தொடர்பாக டெல்லியில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய பொருளாதாரம் குறித்து பேசுகையில் "கடந்த இரண்டு காலாண்டாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பது உண்மைதான். ஆனால் இது நிரந்தராமனது அல்ல.


இது வழக்கமான சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இது முன்னேறிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். தற்காலிகமான இந்த நிலையைக் கண்டு யாரும் தங்களை குழப்பிக் கொள்ள வேண்டாம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டுதான் உள்ளனர்.


தற்போது இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த காலம். இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பிருந்த ஆட்சிகளை விட பா.ஜ.க மீண்டும் பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு புதிய முதலீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.


மேலும் ரயில் சேவைத் துறை அடுத்த 12 ஆண்டுகளில் 700 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. அதேபோல், நாட்டின் அடிப்படை வசதிகளை முன்னேற்ற மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 1.4 டிரில்லியன் டாலர் அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கென முதலீடு செய்ய உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்தும் என்பதால் நம்பிக்கையுடன் முதலீடுகள் செய்யலாம்" என்றார் அவர்.  


Similar News