அத்து மீறி பா.ஜ.க அலுவலகத்திற்குள் நுழைந்து இந்திய எதிர்ப்பு கோஷங்கள் இட்ட பியூஷ் மனுஷை அப்புறப்படுத்திய காவல்துறை

அத்து மீறி பா.ஜ.க அலுவலகத்திற்குள் நுழைந்து இந்திய எதிர்ப்பு கோஷங்கள் இட்ட பியூஷ் மனுஷை அப்புறப்படுத்திய காவல்துறை

Update: 2019-08-28 18:35 GMT

முகநூலில் லைவ் போட்டுவிட்டு சேலம் பா.ஜ.க அலுவலகத்திற்கு யாரும் அழைக்காமல் தானாக சென்ற பியூஷ் மனுஷ், இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியதாக கூறப்பட்டதை அடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  


சேலம் பா.ஜ.க அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக பியூஷ் மனுஷ் என்ற போலி போராளி மீது பா.ஜ.க. சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சேலம் பா.ஜ.க அலுவலகத்திற்குள் அத்துமீறி சென்ற பியூஷ், முகநூல் நேரலையில் பேசியபடி, கட்சி அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்தவர்களிடம், காஷ்மீரின் அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் இந்திய எதிர்ப்பு கோஷத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியது.




https://twitter.com/polimernews/status/1166732741020274689?s=19


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள் அங்கு வந்து பியூஷ் மனுஷைவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனிடையே, தங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்து பியூஷ் மனுஷ் தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க நிர்வாகிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி உதவி ஆணையர் ஆனந்த்குமார் விசாரணை நடத்த வேண்டும் என சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


இதனிடையே கட்சி அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைந்து பா.ஜ.க தொண்டர்களைத் தாக்கி, சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1166686584055353346?s=19



Similar News