70 ஆவது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் உரை!
70 ஆவது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் உரை!
இந்தியா சுதந்திரம் அடைந்த 2 வாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்காக அண்ணல் அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது 166 முறை சந்தித்து ஆலோசனை நடத்திய குழுவினர் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டு பிரதிகளை தாக்கல் செய்தனர் என்ற அரசியலமைப்பு சட்ட வரைவு 1949 நவம்பர் 26ஆம் தேதி அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தன் 70 ஆம் ஆண்டே தற்போது கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் அப்போது முன்னதாக மும்பை தீவிரவாத தாக்குதலில் 11 ஆம் ஆண்டு அனுசரிப்பது தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
குடிமக்களின் உரிமைகள் மற்றும் அவர்களது கடமைகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சம் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து அதனை புனித நூலாக போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் 130 கோடி இந்தியர்களுக்கும் தலை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் நமக்கெல்லாம் அரசியலமைப்பு சாசனம் வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.