பிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு! தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது!!
பிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு! தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது!!
பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அதேபோல ரத்ததான முகாம், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல தமிழகத்திலும், மாநிலம் முழுவதும் இந்து கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு, உடை போன்ற உதவிகள் செய்யப்பட்டன.
தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் CTR.நிர்மல்குமார், ஐ.டி விங் மாநில செயலாளர் M S பாலாஜி ஐ.டி விங் சென்னை கோட்ட பொறுப்பாளர் சி.வெங்கட் ராமன் ஐ.டி விங் காஞ்சி கோட்ட பொறுப்பாளர் செந்தில் உள்பட பா.ஜ.க வினர் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் நமது நாடு உலகின் குருவாய் மாற வேண்டும் என்று அம்மன் பாதத்தில் வேண்டுதலும் வைக்கப்பட்டது.
இதேபோல தமிழகம் முழுவதும் பா.ஜ.க வினரும், பொது மக்களும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.