அறியாமையில் மூழ்கிய சில தமிழர்கள் திருந்துவரா? எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை சொல்லும் கூட்டம் இதற்கு பதில் சொல்லுமா?

அறியாமையில் மூழ்கிய சில தமிழர்கள் திருந்துவரா? எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை சொல்லும் கூட்டம் இதற்கு பதில் சொல்லுமா?

Update: 2019-10-11 06:13 GMT

சீன அதிபரை வசதியாக டில்லியில் சந்திக்காமல் வேலைமெனக்கெட்டு அவரையும் இழுத்துக்கொண்டு தானும் மகாபலிபுரம் வருகிறார் பிரதமர். ஊரே பளபள என்று மாறி வருகிறது.


எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பிரதமர் தமிழ் நாட்டை, தமிழ் மொழியை, அதன் வரலாற்றுச் சிறப்பை எதையும் மறக்கவில்லை; மறைக்கவில்லை.


தமிழனே மறந்த ராஜேந்திர சோழன் திருவுருவப் படத்தை மும்பை கடற்படை தளத்தில் திறக்க வைக்கிறார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று ஐ.நா-வில் உரைத்துப் போலி தமிழ் ஆர்வலர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார். இப்போது சீன தேசத்துடன் பல்லவர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை நினைவு கூறும் வண்ணம் மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் சந்திப்பு நடத்துகிறார்.


இந்த நேரத்தில் மகாபலிபுரத்தை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொன்மை, பல்லவர் பெருமை, கடற்கரைக் கோவில்கள், சிற்பங்கள் எல்லாம் உலகின் பலரின் கண்களில் படும். இதனால் சுற்றுலா பெருகும், தமிழகத்துக்கு வருமானம் கூடும்.


அறியாமையில் மூழ்கிய சில தமிழர்கள் திருந்துவரா? இல்லை வழக்கம்போல கோ பேக் மோடி சொல்லிக்கொண்டு என் கடன் கருப்பு பலூன் விடுவதே என்று பறக்கவிட்டால் பறப்பது பலூனாக இருக்காது. நம் தேசத்தின் மானமாக இருக்கும்.


Similar News