பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் சந்திப்பில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரப்பிரசாதம் - வங்கதேசத்திடமிருந்து எரிவாயு பெறவுள்ள வட கிழக்கு மாநிலங்கள்!!

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் சந்திப்பில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரப்பிரசாதம் - வங்கதேசத்திடமிருந்து எரிவாயு பெறவுள்ள வட கிழக்கு மாநிலங்கள்!!

Update: 2019-10-05 11:34 GMT


பிரதமர் நரேந்திர மோடியும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியாவும் பங்களாதேஷும் ஏழு ஒப்பந்தங்களை மேற்கொண்டு மூன்று திட்டங்களைத் தொடங்கின.


வட கிழக்கு மாநிலங்களில் விநியோகிப்பதற்காக பங்களாதேஷில் இருந்து எல்பிஜி இறக்குமதி செய்யப்படுவது இந்த திட்டங்களில் ஒன்றாகும்.  à®¨à¯€à®°à¯à®µà®³à®®à¯, இளைஞர் விவகாரங்கள், கலாச்சாரம், கல்வி மற்றும் கடலோர கண்காணிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளிலும் ஆழ்ந்த ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் மோடி-ஹசினா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.


இந்த பேச்சுவார்த்தைக்கு பின் வந்த ஊடக அறிக்கையில், பங்களாதேஷுடனான தனது உறவுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும், இரு அண்டை நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது முழு உலகிற்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் மோடி கூறினார். "இன்றைய பேச்சுக்கள் எங்கள் இருதரப்பு உறவுகளை மேலும் உற்சாகப்படுத்தும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஹசீனா முன்னிலையில் அவர் கூறினார்.


கடந்த ஒரு வருடத்தில், இன்று துவக்கப்பட்ட மூன்று திட்டங்கள் உள்பட  à®‡à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà¯à®®à¯ வங்கதேசமும் இனைந்து மொத்தம் 12 திட்டங்களைத் தொடங்கின,  à®‡à®¤à¯ இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கடல்சார்ந்த பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் பலம்பெற்று வருகின்றன என்று வங்கதேச பிரதமர் ஹசீனா தனது உரையில் தெரிவித்தார்.


Similar News