பாகிஸ்தானை பாதுகாக்கும் தேவதையான சவுதியை தன பக்கம் இழுத்த பிரதமர் மோடி! வெற்றிகரமான சவூதி பயணம் தகவல்கள்.!
பாகிஸ்தானை பாதுகாக்கும் தேவதையான சவுதியை தன பக்கம் இழுத்த பிரதமர் மோடி! வெற்றிகரமான சவூதி பயணம் தகவல்கள்.!
மோடியின் சமீபத்திய சவூதி அரேபியா பயணம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு (ஜே.சி.டி.சி) மூலம் பாதுகாப்பு தளத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க எண்ணெய் வளம் கொண்ட அரபு நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
"கொள்முதல் மற்றும் கூட்டு உற்பத்தியின் அடிப்படையில் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவுடனான ஒத்துழைப்பை சவுதி அரேபியா செய்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு இந்திய அதிகாரி சமீபத்தில் செய்தி வெளியிட்டார்.
பிரதமர் மோடியின் சமீபத்திய சவுதி பயணத்தின் போது, இந்தியா-அரபு நாடுகள் இடையே பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சவூதி அரேபியாவுடன் ‘மூலோபாய கூட்டு கவுன்சில் ஒப்பந்தம்’ மற்றும் ‘பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்’ ஆகிய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளும் வளைகுடா பிராந்தியத்தில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியை நடத்தும். இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ ஒத்துழைப்பு அடுத்த பல பல தசாப்தங்களுக்கு ரியாத்தின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இருக்கும்.
ஆனால் இந்தியா – அரபு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடைஞ்சலாக இருக்கும்.ஏனென்றல் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் சவுதிக்கும் இடையிலான நட்பு முன்பு வலுவானது. சவூதி ஒரு தேவதையைப் போல பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி அரேபியாவின் பிரச்சாரத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.