இஸ்லாம் மதபோதகர் ஜாகீர் நாயக் எந்த வழியிலும் தப்ப முடியாது - மலேசிய பிரதமரிடமே மோடி விடுத்த வேண்டுகோள் - பிரிவினைவாதிகளுக்கு வைக்கப்பட்ட செக்!
இஸ்லாம் மதபோதகர் ஜாகீர் நாயக் எந்த வழியிலும் தப்ப முடியாது - மலேசிய பிரதமரிடமே மோடி விடுத்த வேண்டுகோள் - பிரிவினைவாதிகளுக்கு வைக்கப்பட்ட செக்!
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதப் போதகர் ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமத்திடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
ரஷ்ய நாட்டில் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு சமீபத்தில் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மோடி ரஷ்யா சென்றுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவையும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்தார். பின்னர் மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமதுவை சந்தித்தார். அப்போது மத சர்ச்சைக்குரிய இஸ்லாம் போதகர் ஜாகீர் நாயக் பிரச்சினை பற்றி பேசினார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் அவசியம் குறித்தும் மலேசிய பிரதமரிடம் பிரதமர் மோடி விளக்கி கூறினார்.
அப்போது, பயங்கரவாதம் ஒரு உலகளாவிய பிரச்சனை என்றும், எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் மலேசியாவுக்கு எதிரானது என்றும் மலேசிய பிரதமர் மகாதீர் ஒப்புக் கொண்டார்.
இறுதியாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதப் போதகர் ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமத்திடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு ஓட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.