பிரதமர் மோடி குறித்து முகநூலில் கண்டபடி அவதூறு!! சட்டத்தின் பிடியில் ஒருவர் சிக்கினார்!!
பிரதமர் மோடி குறித்து முகநூலில் கண்டபடி அவதூறு!! சட்டத்தின் பிடியில் ஒருவர் சிக்கினார்!!
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் சாஜித் ரிஸ்வி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் பக்கத்தில் நுழைந்து, சர்ச்சைக்குரிய மோடியின் படமும், மோடி மற்றும் உபி முதல்வர் யோகி பற்றி தரக்குறைவாகவும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டிருந்தார். மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டிருந்த இவரது பதிவுகள் குறித்து புகார்கள் சென்றன.
இது குறித்து தகவல் அறிந்த கோட்வாலி காவல் கண்காணிப்பாளர் தரம்பால் சிங் ரிஸ்வி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து, அவரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். இது போல மேலும் பல பேர் மீது புகார் வந்த வண்ணம் இருப்பதால் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கோட்வாலி காவல் கண்காணிப்பாளர் கூறினார்.