இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தொலை காட்சியில் பேச்சு!! காஷ்மீர் குறித்து பேசலாம் என தகவல்!!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தொலை காட்சியில் பேச்சு!! காஷ்மீர் குறித்து பேசலாம் என தகவல்!!

Update: 2019-08-08 12:42 GMT


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான அரசு, சமீபத்தில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த முக்கிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.


இந்நிலையில், இன்று இரவு 8  மணிக்கு டி.வி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி  உரையாற்ற உள்ளார். இதில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், லடாக்-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News