பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: உலகளவில் டிரண்ட் ஆனது!!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: உலகளவில் டிரண்ட் ஆனது!!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் செய்திகள் டுவிட்டரின் உலக அளவில், டிரண்டிங்கில் 7 இடங்களை பிடித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி தொண்டர்களும் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு சேவைகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. மோடிக்கு சமூக வலைதளங்கள் வழியாகவும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் இருந்தும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றன. அதாவது டுவிட்டரில் உலக டிரண்டிங்கில் முதல் 10 இடங்களில் மோடி குறித்த சொற்கள் மட்டும் 7 இடங்களில் உள்ளன.
#HappyBdayPMModi,
#happybirthdaynarendramodi
#HappyBirthdayPM
#NarendraModiBirthday
#PrimeMinister
#Modiji
#ShriModiji
இணையவாசிகளால் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்ட நேரங்களில் அதிகமானோர் உபயோகிக்கும் ஒரே மாதிரியான சொற்கள், ஹேஸ்டேக்கள் போன்றவை, கணக்கிடப்படும். அதில் அதிகம்பேர் பதிவிட்ட சொற்கள் வரிசைப்படி டிரண்ட் பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் இருந்து எந்த செய்திகள் குறித்து அதிகமானோர் பதிவிட்டனர் என்பதை அறிய முடிகிறது.