இந்தியாவின் பலத்தை உணர்ந்துவிட்டோம் - இனியும் போரிடும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் சரண்டர்!

Update: 2023-01-19 02:30 GMT

இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும்தான் வீணாகும்.

இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன.

நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். எனவே, அமைதியை விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

'இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

குறிப்பாக, முக்கிய பிரச்சினையாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதையே அவர் கூறி வருகிறார்.

Input From: Hindu

Similar News