காஷ்மீரில் பிரிவினை பேசிய அரசியல் தலைவர்களுக்கு 18 மாதம் சிறை! கிலியில் பிரிவினைவாத அரசியல் தலைவர்கள்!
காஷ்மீரில் பிரிவினை பேசிய அரசியல் தலைவர்களுக்கு 18 மாதம் சிறை! கிலியில் பிரிவினைவாத அரசியல் தலைவர்கள்!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370 சட்டம் நீக்கப்பட்டபிறகு 90% மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் போராட்டங்கள் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. இணையதள சேவை கைபேசி சேவை போன்றவை இயங்க ஆரம்பித்து விட்டது.
பள்ளிகள் 85% இயங்க ஆரம்பித்து விட்டது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் விளையும் ஆப்பிளை மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கான விலை நிர்ணயமும் செய்துவிட்டது. காஷ்மீரில் சில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வந்தது
இதன் தொடர்பாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்த இணையமைச்சர். காஷ்மீரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் யூனியன் பிரதேசம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு சட்டம் நீக்கத்தின் போது ஜம்மு காஷ்மீரில் உள்ள சில அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டனர். அந்த தலைவர்கள் 18 மாதத்திற்கு அதாவது ஒன்றரை ஆண்டுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதன் மூலம் காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் வரை காஸ்மீர் தலைவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.
இந்த செய்தியை தொடர்ந்து பிரிவினை பேசும் தலைவர்களை உடனடியாக கைது செய்யவும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டிலிலிருந்து நிதி பெரும் அரசியல் கட்சிகளை பட்டியலிடுமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.