மத்திய பா.ஜ.க அரசு இந்தியை திணிக்கவில்லை - தவறாக சித்தரித்து அரசியலாக்கும் தமிழக எதிர் கட்சிகள் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பளார் பதில்!

மத்திய பா.ஜ.க அரசு இந்தியை திணிக்கவில்லை - தவறாக சித்தரித்து அரசியலாக்கும் தமிழக எதிர் கட்சிகள் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பளார் பதில்!

Update: 2019-09-27 14:29 GMT

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கென குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. பரிசளிப்பு விழா இன்று (செப்டம்பர் 27 -ம் தேதி) காலை 11 மணிக்கு சிங்காநல்லூர் எஸ்.எஸ்.வி.எம் சர்வதேசப் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மக்கள் சேவை மையம் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையுரையாற்றினார்.


இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கலந்து கொண்டார். விழாவின் போது மேடையில் பேசிய அவர், இந்தி மொழி படிப்பது இங்கே அரசியலாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இந்தி மொழி திணிப்பை மேற்கொள்ளவில்லை. மற்றோரு மொழியைத் தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பதை தான் வலியுறுத்துகிறது. தமிழ் மக்கள் விரும்பிய மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் இந்தி மொழி கற்றுக் கொள்வதை அரசியலாக்குகிறார்கள்.


ஒரு நாட்டுக்கு பொது மொழி என ஒன்று இருப்பது மிக அவசியம். இப்போது கூட மத்திய அரசு  அறிவிக்கும் திட்டங்கள் முக்கால்வாசி தமிழ் மக்களுக்கு தெரிவதில்லை. இதற்கு மொழியும் ஒரு காரணமாகும். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்று ஒரு தரப்பினரால் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Similar News