கைது நடவடிக்கையையும் தாண்டி சிலை கடத்தல் வழக்கில் சாட்சியங்களை கலைக்க பார்க்கும் காதர்பாட்சா - பொன்.மாணிக்கவேல் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!

கைது நடவடிக்கையையும் தாண்டி சிலை கடத்தல் வழக்கில் சாட்சியங்களை கலைக்க பார்க்கும் காதர்பாட்சா - பொன்.மாணிக்கவேல் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!

Update: 2019-09-06 13:00 GMT

இந்தியாவிலேயே திறமையான காவல்துறைக்கு பெயர் போன மாநிலமாக விளங்கியது தமிழகம்தான். இந்த துறைக்கு எத்தனையோ அதிகாரிகள் வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தால் கூட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே காவல் துறைக்கு என்று இருக்கிற கம்பீரம் மற்றும் நேர்மையை நிலை நாட்டி செல்கிறார்கள். அவர்களில் மாணிக்கமாக விளங்குபவர் பொன் மாணிக்கவேல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வரும் அவருக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் வீட்டில் இருந்த 6 ஐம்பொன் சிலைகளை அப்போது அருப்புக்கோட்டையில் காவல் ஆய்வாளராக இருந்த காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த சிலைகளை காதர்பாட்சாவும், சுப்புராஜூம் முறைப்படி கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆரோக்கியராஜ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் பிரிவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே காதர்பாட்சா துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் அவரையும், சுப்புராஜையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இருந்தாலும் சில நாட்களில் காதர்பாட்சா ஜாமினில் வெளிவந்துவிட்டார்.


பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி பதவிக்கான காலக்கெடு 2 மாதங்களில் முடிய உள்ளது. எனவே இந்த வழக்கை எப்படியாவது இழுத்தடிக்க பார்க்கிறார் காதர்பாட்சா. இது குறித்து பேசிய அதிகாரி பொன் மாணிக்கவேல் "வழக்கில் முக்கியமான சாட்சியை கலைக்க பார்க்கிறார்கள். காதர்பாட்சா காவல் துறையில் இருந்ததால் சாட்சியத்தை கலைத்து வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்று தெரிந்தவர். இன்று கோர்ட்டுக்கு காதர்பாட்சா வரவில்லை. உடல்நிலை சரியில்லை என அவர் அளித்த மனுவையும் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களே சிலை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar News