புதுவை முதல்வர் காரில், போலீசார் அதிரடி சோதனை! முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி!!

புதுவை முதல்வர் காரில், போலீசார் அதிரடி சோதனை! முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி!!

Update: 2019-08-23 07:57 GMT


தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. 


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்த காரையும் விமான நிலைய போலீசார் தீவிர சோதனை செய்தனர்.


Similar News