புதுச்சேரியில் பரபரப்பு.. துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி விடுவிப்பு..! என்ன நடக்கிறது?

புதுச்சேரியில் பரபரப்பு.. துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி விடுவிப்பு..! என்ன நடக்கிறது?

Update: 2021-02-16 21:30 GMT

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை ஆளுநர் பொறுப்பும் அளிக்கப்படுகிறது. 

புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த 29.5.2016 அன்று பதவியேற்றார். யூனியன் பிரதேச கவர்னர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் தான். அதன்படி புதுவையின் கவர்னராக கிரண்பேடியின் பொறுப்பு வருகிற மே மாதத்துடன் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை ஆளுநர் பொறுப்பும் அளிக்கப்படுகிறது.


புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்த 33 பேர் இருப்பார்கள். வேறு கட்சிக்கு சென்றதாக பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே பா.ஜ.க-வில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமார் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினமா செய்ததால் புதுச்சேரி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அமைக்க வேண்டிய எண்ணிக்கை குறைந்ததால் நாராயணசாமி உடனடியாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News