ஸ்டாலின் மிசா சட்டத்தில் தான் கைதானார் என்று சொன்னாரா பொன் ராதாகிருஷ்ணன்? - இல்லவே இல்லை!

ஸ்டாலின் மிசா சட்டத்தில் தான் கைதானார் என்று சொன்னாரா பொன் ராதாகிருஷ்ணன்? - இல்லவே இல்லை!

Update: 2019-10-19 11:27 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க சார்பில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு ரத யாத்திரையில் கலந்துக் கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய போது ஸ்டாலின் கைதாகி உள்ளே இருந்தார் என்பது உண்மை என்றும் அது அனைவரும் அறிந்தது என்ற தொனியில் பேட்டி அளித்திருந்தார்.


ஆனால், இன்று சில ஊடகங்கள் அதை திரித்து மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைதானார் என பொன் ராதாகிருஷ்ணன் சொன்னதாக செய்தி வெளியிட்டுருந்தனர்.


அது தவறான செய்தி என்றும், அந்த பொருள்பட பொன் ராதாகிருஷ்ணன் பேசவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளரும், இளைஞரணி துணைத் தலைவருமான SG சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/SuryahSG/status/1185487748775337985?s=20

Similar News