டெல்லி விமானநிலையத்தில் சக்தி வாய்ந்த RDX வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு !
டெல்லி விமானநிலையத்தில் சக்தி வாய்ந்த RDX வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு !
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் தனியாக ஒரு பை கிடந்தது. இதனை கவனித்த தொழிற்பாதுகாப்பு அதிகாரிகள், பையை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, அந்த பையில் சக்தி வாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்கள் இருந்துள்ளது. இதனால் இந்திரா காந்தி விமான நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இந்த பை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பை நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கைப்பற்றப்பட்டது. இதனால் 1 மணிநேரம் பயணிகளை விமான நிலையத்தை விட்டு வெளிய செல்ல அனுமத்திக்கப்படவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து விமான நிலையம் முழுவதும் சோதனை நடைபெற்றது.
மேலும் பாதுகாப்பு படையினர் விமானநிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லி விமான நிலையம் பரபரப்பாக உள்ளது.