காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து !!
காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து !!
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதன்முதலாக பக்ரீத் பண்டிகை அமைதியான முறையில் இன்று கொண்டாடப்பட்டது. எந்தவிதமான சிறு அசம்பாவித சப்பவங்ளுகம் அங்கு நடைபெறவில்லை. இனிப்புகள் வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கிய 370-வது சட்ட பிரிவு நீக்கப்பட்டது. மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பக்ரீத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகளை தளர்த்தினர். மக்கள் இயல்பாக சாலையில் நடமாடி தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மருந்துகள், உணவுப்பொருட்களைக் கடைகளில் வாங்கினர். மக்கள் தொழுகைக்கும் அருகில் உள்ள மசூதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை மிகவும் அமைதியான முறையில் நடந்தது.
தொழுகை நடந்து முடிந்தபின் முஸ்லிம்கள், ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், முஸ்லிம்களுக்கு இனிப்புகளை வழங்கி பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களும் அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.