அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவம்! அழகான ஆண் குழந்தை பிறந்தது!!
அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவம்! அழகான ஆண் குழந்தை பிறந்தது!!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார்.
அத்திவரதர் பெருவிழாவின் 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்தவாரு பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
அத்தி வரதரை தரிசிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், லட்சக்கணக்கானோர் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 44 நாட்களில் 90 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.
இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ எடையுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.