ஐநா சபை வரை எதிரொலித்த சுஷ்மா சுவராஜ் மறைவு - உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இரும்பு பெண்மணி!
ஐநா சபை வரை எதிரொலித்த சுஷ்மா சுவராஜ் மறைவு - உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இரும்பு பெண்மணி!
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபை தலைவர் மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுஷ்மா சுவராஜ் மறைவு கேட்டு துயரமடைந்தேன். சிறந்த பெண்மணியாக திகழ்ந்தவர். பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
எனது இந்திய பயணத்தின் போது அவரை சந்தித்து பேசியதை மறக்க முடியாது. அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.