23ம் தேதி பிரதமர் மோடி எமிரேட்ஸ், பஹ்ரைன் பயணம்: ஹிந்து கோவில் புனரமைப்பு பணியை தொடங்கி வைக்கிறார் !

23ம் தேதி பிரதமர் மோடி எமிரேட்ஸ், பஹ்ரைன் பயணம்: ஹிந்து கோவில் புனரமைப்பு பணியை தொடங்கி வைக்கிறார் !

Update: 2019-08-19 01:42 GMT
கடந்த 2 நாட்களாக பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக  மாணவர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில், வரும் 23ம் தேதி முதல் வளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 23ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும் தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் 2 நாட்களும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், இந்தியாவில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார் என குறிப்பிட்டுள்ளது.
சுற்றுப்பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹ்ரைன் நாட்டின் மானமா எனும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி கோயில் புனரமைப்பு பணியையும் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

Similar News