கலைஞர் செய்திகளா அல்லது இம்ரான் கான் செய்திகளா? - ஏன் இந்த விஸ்வாசம்? #FactCheck

கலைஞர் செய்திகளா அல்லது இம்ரான் கான் செய்திகளா? - ஏன் இந்த விஸ்வாசம்? #FactCheck

Update: 2019-08-16 20:28 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 370 வது சட்ட பிரிவை நீக்கப்பட்டு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது பாகிஸ்தானை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் உள்பட உண்மையான தேசபற்றுள்ள பெரும்பான்மையான இந்தியர்கள் மத்திய அரசின் முடிவை ஆதிரித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசும் தி.மு.க-வும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்த நிலையில் தான், ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்லிக் தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் விவாதத்தில் பங்குபெற்றார் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் திரு சரவணன் அவர்கள். விவாதத்தில் பேசுகையில்,
"இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் ஒரு போதும் இருந்ததில்லை”,

என்று தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்னாப், அவரது வார்த்தைகளை திரும்ப பெற ஒரு வாய்ப்பும் கொடுத்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அர்னாப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விவாதத்தை விட்டு ஏறினார் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் சரவணன்.
நிலை, இவ்வாறு இருக்க, பா.ஜ.க-வை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக பாகிஸ்தான் தரப்பு செய்திகளுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியவத்துவம் கொடுத்து வருகிறது கலைஞர் செய்திகள்.
சுதந்திர தினத்தன்று காலை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை நேரடியாக ஒளிபரப்பியது. வேறு எந்த இந்திய செய்தி சேனலுமே செய்யாத வேலையை கலைஞர் டிவி செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு சுதந்திரதின உரை நிகழ்த்தியதை ஒளிபரப்பி பாகிஸ்தான் மீதான பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறது.
இதையும் படிக்க : அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை! கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை!
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியில், "எல்லையில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்", என்று பகிரங்கமாக பாகிஸ்தான் தரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளது.
[caption id="attachment_31845" data-align="alignnone" data-width="218"]
Screenshot from Kalaignar News[/caption]
இந்த செய்திகளின் உண்மை நிலையை பார்ப்போம். காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில், இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய இராணுவம். அந்த 7 பேரும், காஷ்மீர் எல்லைப் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் ’பேட்’ (Border Action Team) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
https://twitter.com/thetribunechd/status/1157747837850902528?s=19
ஆனால், கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியோ இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற தோணியில் அமைந்துள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த தாக்குதல் குறித்து இந்தியா தரப்பில் கூறப்பட்டதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ராம் கான் என்ன கூறியுள்ளார் என்பதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
[caption id="attachment_31847" data-align="alignnone" data-width="195"]
Screenshot from Kalaignar News[/caption]
பாகிஸ்தானின் BAT பிரிவினர் நடத்திய தாக்குதலை இந்தியா நடத்திய தாக்குதல் என்றும், இந்தியா நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் இறந்துள்ளதாகவும் இம்ரான் கான் கூறியதை செய்தியாக்கி உள்ளது.
8 ஆகஸ்ட் அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், காஷ்மீரை பிரிக்கும் இந்தியாவின் முடிவால் எல்லையில் பதற்றம் நிலவுவதாக பாகிஸ்தான் ஊடகங்களை போல் செய்தி வெளியிட்டுள்ளது.
[caption id="attachment_31848" data-align="alignnone" data-width="195"]
Screenshot from Kalaignar News[/caption]
மேலும், இந்தியாவின் அடாரி, பாகிஸ்தானின் லாகூர் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான் வழியில் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது என்று செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சம்ஜவுதா ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியவுடன் இந்தியாவும் நிறுத்திவிட்டது என்ற இந்திய தரப்பு செய்தியை பதிவிட கலைஞர் செய்திகளுக்கு மனமில்லை போல் தெரிகிறது.
https://twitter.com/ANI/status/1160530989434724352?s=19
மேலும், வேறு எந்த செய்திகளிலும் தென்படாத புதிரான செய்தி ஒன்றையும் குறிப்பிட்டுள்ளது கலைஞர் செய்திகள். பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கைகளை கைவிடுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் நடவடிக்கைகளை பார்த்து இந்தியா பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்ற தோணியில் உள்ள இந்த தகவலை கலைஞர் செய்திகளுக்கு மட்டும் யார் கூறினார்கள் என்று தெரியவில்லை.
ஆகஸ்ட் 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், "சுதந்திர காஷ்மீர் கோரி இந்தியாவுக்கு எதிராக பிரிட்டனில் பாகிஸ்தானியர்கள் போராட்டம்", என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு கடைபிடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எதிரான நிலைப்பாடு என்று எப்படி கூறுகிறார்கள்? மாநிலங்களவையின் மேல் சபையிலும், கீழ் சபையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டபிரிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக சி.என்.என். நியூஸ்18 தொலைக்காட்சி கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மொத்த காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் நரேந்திர மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பேராதரவு தெரிவித்து உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. ஜம்மு, தோடா, லடாக், காஷ்மீர் ஆகியவற்றை தனித்தனி மண்டலங்களாக பிரித்து இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளனர். 20 நிருபர்கள் குழு இதில் ஈடுபட்டுள்ளது.
https://twitter.com/News18India/status/1160186432956190720?s=19
ஜம்மு:
காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கத்திற்கு ஜம்மு மண்டலத்தில் 93 சதவீம் ஆதவு தெரிவித்துள்ளனர். 4 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் நடுநிலை வகித்துள்ளனர்.
தோடா:

தோடா மண்டலத்தில் 83 சதவீதம்  பேர் ஆதரவு  தெரிவித்துள்ளனர். 17 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லடாக்:
லடாக் மண்டலத்தில் 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் லே பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதேரவு தெரிவித்துள்ளனர். கார்கில் பகுதியில் உள்ளவர்களில் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர்:
பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்கம் மற்றும் பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள காஷ்மீர் மண்டலத்தில் 58 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 12 சதவீதம் பேர் நடுநிலை வகித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 98 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CNNnews18/status/1160166811901390851?s=19
காஷ்மீர் விவகாரத்தில் அனைவரும் இந்தியாவின் பக்கம் நிற்கையில், தி.மு.க-வும், கலைஞர் தொலைக்காட்சியும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்டுள்ளது தேசபற்றுள்ள தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News