ரஷியா - சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து : ஒரே நேரத்தில் கையெழுத்தான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.!
ரஷியா - சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து : ஒரே நேரத்தில் கையெழுத்தான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.!
ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புதினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். பின்னர், இரு நாட்டு அதிபர்கள் முன்னிலையில் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின
அப்போது அதிபர் புதினுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டும் இடையிலான உறவல்ல, இந்த நல்லுறவில் இருநாடுகளை சேர்ந்த அனைத்து மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், ரஷியாவின் விளாடிவ்ஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.