சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 90 இடங்கள் எவை..எவை? கவனம் அதிகம்.!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 90 இடங்கள் எவை..எவை? கவனம் அதிகம்.!

Update: 2020-04-14 04:17 GMT

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று உள்ள நபர்கள் இருக்கும் 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இதுவரை 205 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் உள்ளனர்.

இந்த மண்டலங்களில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வசிக்கும் வீடு, தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை முழுமையாக சென்னை மாநகராட்சி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியதோடு, அனைவரையும் மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சென்னையில் மொத்தம் 90 இடங்களைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, மாநகராட்சியின் முழு கட்டுப்பாட்டில் அவை கொண்டு வரப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தொடர்பான விவரங்கள்:

1. திருவொற்றியூர் - 3 (ராமமூர்த்தி நகர், காமராஜர் நகர், வள்ளுவர் நகர்)2, மாதவரம் - 3 (விநாயகபுரம், லட்சுமிபுரம், கொல்கத்தா ஷாப் 3வது தெரு)

3. தண்டையார்பேட்டை - 7 (வார்டு - 34, 38, 40, 41, 46, 47)

4. ராயபுரம் - 26 (வடக்கு மாட வீதி, மேற்கு மாட வீதி, மின்ட் ஸ்ட்ரீட், 7 வெல் தெரு, விநாயகம் சாலை, எம்.கே. கார்டன், டேவிட்சன் தெரு, காசி சிட்டி தெரு, பார்டர் தோட்டம், அருணாச்சலம் லேன்)

5. திருவிக நகர் - 14 (வார்டு - 73, 66, 68, 75, ஓட்டேரி)

6. அண்ணாநகர் - 12

7. தேனாம்பேட்டை - 8

8. கோடம்பாக்கம் - 2 (சைதாப்பேட்டை மசூதி பள்ளம், ஜாபர்கான் பேட்டை வேணுகோபால் தெரு)

9. வளசரவாக்கம் - 3 (பாலாஜி நகர் 7வது தெரு, அங்கமுத்து சாலை, போரூர் சக்தி நகர்)

10. ஆலந்தூர் - 2 (ஜின்னா தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு)

11. அடையாறு - 2 (கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெரு, விஜிபி சாலை சைதாப்பேட்டை)

12. பெருங்குடி - 6 (பாலவாக்கம், பெருங்குடி, மடிப்பாக்கம்)

13. சோழிங்கநல்லூர் - 2 (பனையூர், ஈஞ்சம்பாக்கம்)

Similar News