பிகில் விழாவுக்கு அனுமதி அளித்த கல்லூரியிடம் சரமாரி கேள்வி !! தமிழக அரசு விளக்கம் கேட்பு!!
பிகில் விழாவுக்கு அனுமதி அளித்த கல்லூரியிடம் சரமாரி கேள்வி !! தமிழக அரசு விளக்கம் கேட்பு!!
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. ஆயிரம், இரண்டாயிரம் என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் குவிந்தனர். நாற்காலிகளின் எண்ணிக்கையை மீறி 2 மடங்குக்கு அதிகமாக டிக்கெட்டுகளை விற்றதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு ஏராளமான ரசிகர்கள் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்தனர்.
இந்த விழாவில் பேசிய விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்காததே சுபஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்று அதிமுகவை மறைமுகமாக கேவலமான வகையில் தாக்கி பேசியிருந்தார்.
விஜயின் கருத்துக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் கடுமையான கருத்துக்களை வெளியிட்டனர். இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் அப்பாவி ரசிகர்களிடம் கொள்ளை அடிப்பதற்காகவே நடத்தப்பட்ட இந்த பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என கல்லூரியிடம் உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. எந்த அடிப்படையில் அனுமதி தரப்பட்டது எனவும் கல்லூரியிடம் தமிழக உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.