ராகுல் காந்தி வைத்த முக்கிய குற்றச்சாட்டு... பளிச்சென்று பதிலை கூறிய அதானி குழுமம்!

ராகுல் காந்தி வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் கொடுத்த பதில்.

Update: 2023-04-13 01:29 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது MP பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் காரணமாக குஜராத் உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. குறிப்பாக இந்த ஒரு தீர்ப்பில் ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவி தற்பொழுது பறிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் இருக்கிற காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


அந்த வகையில் ராகுல் காந்தி பிரச்சினைக்கு மாற்றாக அதானி குடும்பத்தை குறி வைத்து, விளக்கம் கூறி இருக்கிறார்கள். குறிப்பாக அதானி குழுமத்தின் பெயரில் யாரோ இருபதாயிரம் கோடி முதலீடு செய்து இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப் பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது அதானிக் குழுமம் இதற்கு தகுந்த முறையில் விளக்கம் அளித்து இருக்கிறது. பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேடுகள் செய்யவில்லை என்றும் மோசமான கணக்குகளில் தங்கள் முதலீடு செய்வது இல்லை என்றும் அதானி குழுமம் கூறி இருக்கிறது.


அதானி குழுமத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் போலியானது. மேலும் அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார்.அது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று அதானி நிறுவத்தின் உரிமையாளர் கூறியிருக்கிறார். பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படும் நிறுவனங்களை இப்படி சமூக விரோதிகளாக மாற்றும் முயற்சிகள் காங்கிரஸ் எப்பொழுதும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Vikatan

Tags:    

Similar News