தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு - பா.ஜனதா சாலை மறியல்!

வாழப்பாடியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரதீய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-06 11:30 GMT

தி.மு.க மற்றும் திராவிட மாடல் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க தொண்டர் கலீல் என்பவர் 'வாழை கலீல் திராவிடன்' என்ற பெயர் போட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் உருவப்படத்திற்கு நேற்று செருப்பு மாலை அணிவித்தார் . இது குறித்த தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் செருப்பு மாலையை அகற்றி பஸ் நிலையம் பகுதியில் இருந்த படத்தை அகற்றினர். படத்தை வைத்த கலீல் என்பவரை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர் .

இந்த தகவலை அறிந்த சேலம் கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் சண்முகநாதன் தலைமையிலான கட்சியினர் வாழப்பாடி பஸ் நிலையப் பகுதியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த தி.மு.க.வினரை கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பியதோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அதை கண்டித்து பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Similar News