“பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது” - இந்தி மொழி பற்றி ரஜினி கருத்து!!
“பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது” - இந்தி மொழி பற்றி ரஜினி கருத்து!!
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமதுநாடு மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும்கூட, பொதுவான மொழி இருந்தால், அது நாட்டின் ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லதாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான மொழியை கொண்டுவர முடியாது. அதனால், எந்த மொழியையையும் இங்கு திணிக்க முடியாது.
இந்தி மொழியை திணித்தால் தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்க மாட்டார்கள். வடநாட்டில்கூட பல மாநிலங்கள் ஏற்காது.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.