இன்றைக்கும் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் !! அமைச்சர் புகழாராம்

பழம்பெரும் கதாசிரியரான கலைஞானத்துக்கு சென்னையில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாடகை வீட்டில் இருக்கும் கலைஞானத்துக்கு புதிய வீட்டை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினியை பாராட்டி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-
கலைஞானத்துக்கு, இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. மற்றவர்களை பாராட்டுவதற்கு நல்ல மனம் வேண்டும்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து முதல்-அமைச்சர் ஆகிவிட்ட பிறகு ரஜினி படங்கள் நிறைய வெளிவந்தன. அவரது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். நானும் ரஜினி ரசிகன்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர்.

என்றைக்கும் அவர்தான் சூப்பர் ஸ்டார். எதற்கும் ஒரு ராசி வேண்டும். அந்த ராசிக்கு சொந்தக்காரர் கலைஞானம். தமிழ் திரை உலகின் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை அம்மாவின் அரசு நிறைவேற்றி தரும். திரை உலகை நாங்கள் கைவிடமாட் டோம். ஏனென்றால் புரட்சி தலைவர், அம்மா என அவர்கள் வழி வந்த அரசு தான் இந்த அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.