பாஜக வெளியிட்டது அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் -ரஜினி
பாஜக வெளியிட்டது அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் -ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை அளித்தார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பா.ஜ.க சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளுவர் சர்ச்சை பற்றி பேசிய ரஜினி அவர் ஒரு ஞானி ,சித்தர், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரின் குறள் பார்த்தால் உங்களுக்கே தெரியும், அதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதை பா.ஜ.க அவர்களின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் போட்டனர். அது அவர்களின் விருப்பம், அவர்கள் யாரையும் பட்டையை போட்டுக்கொள் , காவிய உடுத்திக்கொள் என கட்டாயப்படுத்தவில்லை. இதை இவ்வளவு பெரிய விஷயமாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் எவ்வளவோ பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது, மக்களின் தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன எனத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.