ரஜினி மகள் பாஸ்போர்ட் மாயம்! லண்டன் விமான நிலையத்தில் தவிப்பு!!
ரஜினி மகள் பாஸ்போர்ட் மாயம்! லண்டன் விமான நிலையத்தில் தவிப்பு!!
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மற்றும் மருமகன் விசாகன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு, எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து லண்டன் சென்றனர்.
லண்டன் விமானநிலையத்தில் இறங்கிய அவர்கள், குடியுரிமை அதிகாரிகளிடம் காட்டுவதற்காக பாஸ்போர்ட்களை தேடினர். அப்போது அவர்களது பாஸ்போர்ட்கள் இருந்த சூட்கேஸ் மாயமானது தெரியவந்தது.
அந்த சூட்கேஸில் பாஸ்போர்ட்களுடன், அமெரிக்க டாலர்களும் மற்ற முக்கிய பொருட்களும் இருந்ததன. இதனால் சௌந்தர்யாவும், விசாகனும் அதெிர்ச்சி அடைந்தனர். பாஸ்போர்ட் இல்லாததால் வெளியேற முடியாமல் தவித்தனர்.
பின்னர், இதுபற்றி லண்டன் விமானநிலைய காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்களை போலீசார், விமானநிலைய ஓய்வறையில் தங்கவைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றிய தகவல் தந்தை ரஜினிக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
தூதரக அதிகாரிகளின் விரைந்து செயல்பட்டு, சௌந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கினர். அதன்பிறகே, அவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, லண்டன் விமானநிலையத்தில் தவித்த ரஜினி மகள் சௌந்தர்யாவும், விசாகனும் அங்கிருந்து வெளியேறினார்கள்.